search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman dead"

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜவகர் ( வயது 29). மீனவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஜவகர் கடந்த 7-ந் தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 8 பேருடன் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றார்.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து ஜவகரை மீட்டு அவரை படகில் ஏற்றினர். அப்போது ஜவகர் பேச்சு, மூச்சு இன்றி கிடந்துள்ளார்.

    இதனையடுத்து அவர்கள் விரைவாக படகை செலுத்தி தூத்துக்குடிக்கு அரசு மருத்துவமனைக்கு ஜவகரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவகர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார்.
    • தொழிலாளர்கள் ஜஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக இறந்து போனார்.

    குளச்சல்:

    மணவாளக்குறிச்சி அருகே முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 55). விசைப்படகில் மீன்பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி வழக்கம்போல் புரூஸ் என்பவரின் விசைப்படகில் மீன் பிடிக்க முட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஜஸ்டின் மற்றும் 25 தொழிலாளர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர்.

    நேற்று இவர்கள் 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார். உடனே தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படகில் மயங்கி விழுந்து பலியான மீனவர் ஜஸ்டினுக்கு விஜி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார்.
    • தண்ணீரில் தத்தளித்த மீனவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40) மீனவர். இவர் கடந்த 21-ந்தேதி இரவு பைபர் படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டார்.

    அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அய்யாசாமி திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.

    அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் சக மீனவர்கள் அய்யாசாமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று நம்பியார் நகர் துறைமுகத்திற்கு கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் அய்யாசாமியின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×