முட்டம் கடலில் விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் மரணம்

42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார். தொழிலாளர்கள் ஜஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக இறந்து போனார்.
முட்டம் கடலில்  விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் மரணம்
Published on

குளச்சல்:

மணவாளக்குறிச்சி அருகே முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 55). விசைப்படகில் மீன்பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந்தேதி வழக்கம்போல் புரூஸ் என்பவரின் விசைப்படகில் மீன் பிடிக்க முட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஜஸ்டின் மற்றும் 25 தொழிலாளர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர்.

நேற்று இவர்கள் 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார். உடனே தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படகில் மயங்கி விழுந்து பலியான மீனவர் ஜஸ்டினுக்கு விஜி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com