நாகையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார்.தண்ணீரில் தத்தளித்த மீனவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.
நாகையில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
Published on

நாகப்பட்டினம்:

நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40) மீனவர். இவர் கடந்த 21-ந்தேதி இரவு பைபர் படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டார்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அய்யாசாமி திடீரென நிலைதடுமாறி படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூழ்கினார்.

அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் சக மீனவர்கள் அய்யாசாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று நம்பியார் நகர் துறைமுகத்திற்கு கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் அய்யாசாமியின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com