செய்திகள்
பொதுமக்கள் குடிநீர் வீணாகும் இடத்தில் தங்களது கை, கால், முகங்களை கழுவி சென்றனர்.

திருமுருகன்பூண்டி அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Published On 2020-08-16 07:46 GMT   |   Update On 2020-08-16 07:46 GMT
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டியை அடுத்த கோபால்டு மில் அருகே கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டியை அடுத்த கோபால்டு மில் அருகே கடந்த 1 மாதத்திற்கு முன்பு சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பு இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அங்கு 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தொடர்ந்து சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அங்கு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவது அப்பகுதி மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாகி வருகிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம் காட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குடிநீர் வீணாகும் இடத்தில் தங்களது கை, கால், முகங்களை கழுவி சென்றனர். ஒருசிலர் அங்கேயே குளிப்பதற்கும் தயாரானார்கள். இது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News