செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு

Published On 2020-08-15 13:48 GMT   |   Update On 2020-08-15 13:48 GMT
கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் நவீன ஆய்வகத்தை, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வநாயகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் காந்திகிராமம் (சித்தா மருத்துவமனை) ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சுமார் 700 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நவீன ஆய்வகமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையங்கள் மற்றும் நவீன ஆய்வகத்தை, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வநாயகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர்கள் ராமச்சந்திரன், பூங்கோதை ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News