செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை ஐகோர்ட்டில் 24 அரசு வக்கீல்கள் நியமனம்

Published On 2020-08-15 10:30 GMT   |   Update On 2020-08-15 10:30 GMT
மதுரை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்பட 24 அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மதுரை:

சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் அட்வகேட் ஜெனரல், தலைமை குற்றவியல் அரசு வக்கீல், கூடுதல் அரசு வக்கீல்கள் என 200-க்கும் மேற்பட்ட வக்கீல் பணியிடங்கள் உள்ளன. மதுரை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசு வக்கீல் பணியிடங்கள் காலியாக இருந்தன.

தற்போது மதுரை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உள்பட 24 அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டு நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை ஐகோர்ட்டின் 2-வது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக எம்.ஸ்ரீசரண்ரங்கராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிறப்பு அரசு வக்கீல்களாக சி.ரமேஷ், கே.பி.கிருஷ்ணதாஸ், எம்.முத்துகீதையன், கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன், கே.பி.நாராயணகுமார் ஆகியோரும், கூடுதல் அரசு வக்கீல்களாக எம்.ராஜராஜன், கே.சத்தியசிங், எம்.முனியசாமி, பி.மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உரிமையியல் பிரிவில் ஆர்.முருகராஜ், ஜெ.லெட்சுமி பிரசன்னா, எம்.திலகர், ஏ.கார்த்திக், ஜி.அர்ஜூனன், எம்.ராஜேஸ்வரி ஆகியோரும், குற்றவியல் பிரிவில் ஆர்.சரவணகுமார், ஆர்.ஈரோட்டுசாமி, ஆர்.சீனிவாசன், எம்.கணேசன், எஸ்.இ.வெரோனிகா வின்சென்ட், எம்.வி.சந்திரசேகரன், கே.ஆர்.பாரதிகண்ணன், கே.கார்மேகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு வக்கீல்கள் எம்.முருகன், பகவதி ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News