செய்திகள்
தெற்கு ரெயில்வே

ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் முறையில் அலுவலக தகவல் பரிமாற்றம் 4 மடங்கு அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே

Published On 2020-08-13 22:11 GMT   |   Update On 2020-08-13 22:11 GMT
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 43 ஆயிரத்து 557 மின்னணு கோப்புகள் மூலம் அலுவலக தகவல்கள் பரிமாற்றுவது அதிகரித்துள்ளது
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் அலுவலகம் தொடர்பான தகவல்கள் அடங்கிய கோப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரிமாற்றம் செய்ய கையேடு தாக்கல் அமைப்பு (காகிதம்) மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் தற்போது காகிதம் அல்லாத ‘டிஜிட்டல் தளம்’ மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதால் தெற்கு ரெயில்வேயில் பணிகள் மிக வேகமாக நடைபெறுகிறது. இதனால் ரெயில்வேயின் செயல்பாடு செலவுகளை சேமிப்பது மட்டுமல்லாமல், காகித அச்சு செய்வதும் குறைந்துள்ளது. டிஜிட்டல் முறையில் ‘மின்னணு கோப்புகள்’ அனுப்புவது கடந்த 4 மாதத்தில் மட்டும் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

ஊரடங்குக்கு முன்பு வரை தெற்கு ரெயில்வேயில் 9 ஆயிரத்து 964 மின்னணு கோப்புகள் மூலம் அலுவலக தகவல் பரிமாற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 43 ஆயிரத்து 557 மின்னணு கோப்புகள் மூலம் அலுவலக தகவல்கள் பரிமாற்றுவது அதிகரித்துள்ளது. திருச்சி கோட்டத்தில் அலுவலக வேலைகள் 100 சதவீதம் ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கோட்டங்களிலும் விரைவில் 100 சதவீதம் ‘டிஜிட்டல்’ மயமாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News