செய்திகள்
இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-13 16:37 GMT   |   Update On 2020-08-13 16:37 GMT
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து வந்தவாசி தேரடியில் உள்ள தபால் நிலையம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி:

வந்தவாசி தேரடியில் உள்ள தபால் நிலையம் முன்பாக இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வந்தை எம்.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய கல்விக் கொள்கை, ரெயில்வே துறையை தனியார் மயமாக்கல் திட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும், தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு, கையில் பாடப்புத்தகத்தை வைத்திருந்தனர். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் சி.எஸ்.கெளரிசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கோவிந்தராஜன், சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வீரராகவன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆறுமுகம், நகரத் தலைவர் எம்.ரமேஷ்பாபு, நகர செயலாளர் ஏ.குட்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News