செய்திகள்
வேதா இல்லம்

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: தமிழக அரசு

Published On 2020-08-12 08:28 GMT   |   Update On 2020-08-12 08:28 GMT
மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதுகுறித்து அரசிதழிலும் வெளியிட்டது.

அதற்கான தொகையை கோர்ட்டில் தமிழக அரசு செலுத்தியது. இதை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என பரிந்துரைக்கப்பட்டது,

ஜெயலலிதாவின் வாரிசு, அரசுடைமையாக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்ளை முடிவு. அதில் மறுபரிசீலனை என்ற பரிந்துரையை ஏற்க இயலவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News