பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
பதிவு: ஆகஸ்ட் 11, 2020 03:08
ஜி.கே.வாசன்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ந் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்கு தான் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளனர். மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை.
எதிர்பாராதவிதமாக இயற்கையின் சீற்றத்தால் இழப்பு ஏற்படுமானால், விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற முடியாமல் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள். எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :