செய்திகள்
கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Published On 2020-07-31 14:31 GMT   |   Update On 2020-07-31 14:31 GMT
எடப்பாடியில் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
எடப்பாடி:

எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி-கொமாரபாளையம் சாலையில் நத்தக்காட்டூர் முதல் மூலப்பாதை வரை ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பில் 7.80 கி.மீ. நீளம் சாலை பணிகள் மற்றும் ஜலகண்டாபுரம் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடப்பாடி-தாரமங்கலம் சாலையில் உள்ள ஓம்சக்தி காளியம்மன் கோவில் முதல் அரசு ஆஸ்பத்திரி வரை ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பில் 2.80 கி.மீ. நீளத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலை வட்டகண்காணிப்பு பொறியாளர் ஜெ.கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது எடப்பாடி கோட்டப்பொறியாளர் நடராஜன், உதவி கோட்டப்பொறியாளர் க.கண்ணன் மற்றும் உதவிப்பொறியாளர் நேசவெங்கடகிரி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News