செய்திகள்
கொரோனா தடுப்பு சிகிச்சை மையம்

100 படுக்கைகளுடன் கொரோனா தடுப்பு சிகிச்சை மையம்

Published On 2020-07-29 10:34 GMT   |   Update On 2020-07-29 10:34 GMT
திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை 100 படுக்கைகளுடன் கொரோனா நோய்த்தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை 100 படுக்கைகளுடன் கொரோனா நோய்த்தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் சிகிச்சை மையத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனையை பார்வையிட்ட அமைச்சர் சித்த மருத்துவர்கள், யோகா ஆசிரியர்களிடம் சித்தமருத்துவம் குறித்தும் அங்கு அளிக்கப்படும் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கொரோனா நோய்தொற்று உடையவர்கள் 5 நாட்களில் உடல் நலம் பெற்று வீட்டிற்கு திரும்பும் அளவுக்கு மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பாம்கோ சேர்மன் நாகராஜன், ஆவின் சேர்மன் அசோகன், திருப்பத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் சண்முகவடிவேல், ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, வடிவேல், சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்டுராஜ், தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News