செய்திகள்
பொதுமக்கள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நாங்குநேரி அருகே மருத்துவ முகாம்

Published On 2020-07-28 11:10 GMT   |   Update On 2020-07-28 11:10 GMT
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா வைரஸ் இருமல், சளி, காய்ச்சல் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இட்டமொழி:

நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா வைரஸ் இருமல், சளி, காய்ச்சல் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

முகாமில் நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், டாக்டர் இந்துலேகா, நாங்குநேரி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ராஜா நம்பி கிருஷ்ணன், நாங்குநேரி நகர செயலாளர் பரமசிவன், முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் சங்கரலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. சங்கனாங்குளம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் 200 பேருக்கு இலவச அரிசி, காய்கறிகளை தன் சொந்த செலவில் வழங்கினார்.
Tags:    

Similar News