search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri"

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.
    • இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் என்கிற திட்டத்தை தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் செயல்படுத்தி வருகிறார்.

    2-ம் கட்டம்

    ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வாரியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொகுதி மக்களுடன் அவர் தங்கி, அவர்களுடன் உணவருந்தி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு, நிவர்த்தி செய்து கொடுத்து வருகிறார்.

    இதுவரையில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    தற்போது, 2-ம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வருகிற டிசம்பர் முதல் வாரத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழியில் 2-ம் கட்டமாக மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து, தொகுதியில் உள்ள பிற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.

    இதுகுறித்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிராமப்புறங்களை அதிகம் கொண்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதுமே நான் பயணித்துக் கொண்டிருந்தாலும், பொதுமக்களுடன் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இன்னும் நெருங்கிப் பழக, இந்தத் திட்டம் உதவுகிறது.

    பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை இந்த நிகழ்ச்சியின் போது மனுக்களாகத் தந்தால், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பொதுமக்கள் அனைவரும் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

    மேலும், இனிவரும் நாட்களில் நடைபெறும் மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில், எங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் இட்டமொழியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும் அழைக்கின்றேன்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் பாண்டி மயங்கி கிடந்தார்.
    • 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி உருண்டைகல் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 79). இவர் இன்று அதிகாலை அவரது வீட்டில் முன்புள்ள திண்ணையில் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    தற்கொலை

    அதனை அந்த வழியாக அந்த அவரது சகோதரர் பார்த்து அவரை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாண்டியின் மனைவி கோமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் பாண்டி சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட பாண்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் நம்பிராஜன் நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    • தகராறின்போது முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார்.
    • காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் சரகம் பதைக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது 45). விவசாயி. இவரது மகன் முருகன், அதே ஊரை சேர்ந்த முத்துசரவணனுடன் (23) ஒரே மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்துள்ளார். இது இசக்கிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவர் முத்துசரவணனை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார். இதைப்பார்த்த இசக்கியின் மகள் அதனை தடுக்க வந்தார். அவரையும் முத்துசரவணன் கம்பால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜய நாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துசரவணனை கைது செய்தனர்.

    • பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டபிள்ளைபுதூர், கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 51). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டபிள்ளைபுதூர் சாஸ்தா கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பெருமாள் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த உன்னங்குளத்தை சேர்ந்த சின்ராஜ் (21) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.
    • ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் வானுமாமலை (வயது51). இவர் கரந்தாநேரியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஓட்டலில் மேலாளராக உள்ளார்.

    ஓட்டல் கட்டுமான பணியில் தெய்வநாயகபேரியை சேர்ந்த ராஜன் (26) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக ராஜன் வேலைக்கு வரவில்லை. இதனால் வானுமாமலை அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டார்.

    மேலும் சம்பள பணத்தை உரிமையாளர் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் மோட்டார் சைக்கி சென்று அரிவாளை காட்டி மிரட்டி வானுமாமலையிடம் சம்பளத்தை கேட்டு தகராறு செய்துள்ளார்.

    தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராஜன், வானுமாமலையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி, இதுதொடர்பாக ராஜனை கைது செய்தனர்.

    • சிதம்பரத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு, பிள்ளையார் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது52), விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமையா என்ற ராஜுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் ராமையாவின் தந்தை சங்கரலிங்கம் இறந்து விட்டார்.

    இதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக சிதம்பரம், ராமையாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது ராமையா, சிதம்பரத்தை அவதூறாக பேசி தாக்கி னார்.

    மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதா கவும் மிரட்டினார். இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமையாவை தேடி வரு கின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி.
    • சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமையா மகன் வானுமாமலை என்ற கட்ட வானுமாமலை (வயது30). கூலி தொழிலாளி யான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் வானுமாமலை தனது வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது உடலில் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரத்தில் உடலில் வெப்பம் தாங்காமல் விழித்த வானுமாமலை உடலில் தீ எரிவதை கண்டு சத்தம் போ ட்டார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக நாங்குநேரி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி மீது தீ வைத்து அவரை உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • விஜயாபதி மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாங்குநேரி, ராஜாக்கள் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களான நாங்குநேரி, விஜயாபதி மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட் பட்ட நாங்குநேரி, ராஜாக்க ள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள். மேலும் விஜயாபதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

    • நாகர்கோவிலில் இருந்து நெல்லை, கோவில்பட்டி, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    களக்காடு:

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், கடப்பா, வாடி, புனே, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று நாங்குநேரி தாலுகா பகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த ரெயில் இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகர்கோவில்-மும்பை ரெயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. இந்த ரெயிலுக்கு நாங்குநேரி பகுதி பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    • நாராயணன் தனது உறவினர் சுடருடன் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார்.
    • ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் நாராயணன் (வயது25). இவர் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரெங்கராஜ புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதற்காக நாராயணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று நாராயணன் தனது உறவினர் சுடருடன் கோவில் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லெட்சுமணன் மகன்கள் ஸ்ரீராமன், ஹரிராம், ராமசுந்தரம் மகன் குமார் ஆகியோருக்கும், நாராயண னுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஸ்ரீராமன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29).
    • இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று நயினார், அவரது மகன் கந்தன் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று, அவரை அவதூறாக பேசினர். இதனை தட்டி கேட்ட கார்த்திக்கின் மனைவி வித்யா, அவரது தம்பி மனைவி அனிதா ஆகியோரையும் அவதூறாக பேசினர். அத்துடன் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர்.

    அரிவாளால் வீட்டின் கதவையும், குடிநீர் குழாயை யும், பாத்திரங்களையும் வெட்டி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த கார்த்திக், நயினாரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த நயினார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி 2 பேரும் மூன்றடைப்பு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த நயினார், அவரது மகன் கந்தன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார்.
    • தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அந்த மாணவனுக்கும், அதே பள்ளியில் பயிலும் பிளஸ்-1 படிக்கும் கழுகுமலையை சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே பள்ளியில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டுள்ளார். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் கழுகுமலையை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு தனியாக அமர்ந்திருந்த லட்சுமியாபுரம் மாணவரை அவதூறாக பேசி தாக்கினர். இதில் காயமடைந்த மாணவனை அப்பகுதியினர் மீட்டு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மாணவர் மற்றும் அவரது கூட்டாளிகளான 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    நாங்குநேரியில் உள்ள பள்ளியில் மாணவர், அவரது தங்கை மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை போல கழுகுமலையில் நடைபெற்று இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×