செய்திகள்
காட்டுப் பன்றி

காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி - தமிழக அரசு

Published On 2020-07-25 14:41 GMT   |   Update On 2020-07-25 14:41 GMT
விளை நிலங்களை பாழ்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதியளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
விளை நிலங்களை பாழாக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையின் 9 கோட்டங்களின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.   மேலும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஓசூர், கோவை, சத்தியமங்கலம் ஆகிய 9 வன கோட்டங்களின் வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி கடந்த ஜூலை 4ம் தேதி அரசாணை வெளியிட்டது.

அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், பயிர்களை காக்கும் நடவடிக்கையை தொடர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மலைப்பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கோரி கொடைக்கானலைச் சேர்ந்த கிருஷ்ஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News