செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 7,758 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக முழுவிபரம்

Published On 2020-07-25 14:36 GMT   |   Update On 2020-07-25 14:36 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 56வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.  தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,409ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 22வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 1989 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்


அரியலூர் 29    
செங்கல்பட்டு 563
சென்னை 1131
கோயம்புத்தூர் 167
கடலூர் 38
தருமபுரி 25
திண்டுக்கல் 153
ஈரோடு 17
கள்ளக்குறிச்சி 39
காஞ்சிபுரம் 382
கன்னியாகுமரி    397
கரூர் 8
கிருஷ்ணகிரி 14
மதுரை 946
நாகப்பட்டினம் 1
நாமக்கல் 11
நீலகிரி 47
பெரம்பலூர்    5
புதுக்கோட்டை  124
ராமநாதபுரம் 12
ராணிப்பேட்டை 95
சேலம் 107
சிவகங்கை 177
தென்காசி 387
தஞ்சாவூர் 7
தேனி 246
திருப்பத்தூர் 24
திருவள்ளூர் 682    
திருவண்ணாமலை 322
திருவாரூர் 40
தூத்துக்குடி 307
திருநெல்வேலி 207
திருப்பூர் 30
திருச்சி 333
வேலூர் 330
விழுப்புரம் 115
விருதுநகர் 217  

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 18
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)  5
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0

மொத்தம் 7,758
Tags:    

Similar News