செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை வளாகம்

அது தவறான தகவல்... மாணவர் சேர்க்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

Published On 2020-07-24 14:01 GMT   |   Update On 2020-07-24 14:01 GMT
ஆகஸ்ட் 3ல் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்ததாக தகவல் பரவியது. இது தொடர்பாக சில பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர் சேர்க்கை தொடர்பான தகவலை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. ஆகஸ்ட் 3ல் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது தவறான தகவல் என்றும், மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

ஆகஸ்ட் 3ல் மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News