செய்திகள்
சுற்றுலா படகு நிறுத்தும் தளம்

பாம்பன் குந்துகால் பகுதியில் கடல் சீற்றம்- சுற்றுலா படகு நிறுத்தும் தளம் உடைந்து மூழ்கியது

Published On 2020-07-24 08:15 GMT   |   Update On 2020-07-24 08:15 GMT
பாம்பன் தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் குந்துகால் கடற்கரையில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த பனைமரத்தால் ஆன சுற்றுலா படகு நிறுத்தும் தளமானது உடைந்து சேதமடைந்தது.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கடல் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே இருந்து வருகிறது. கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் குந்துகால் கடற்கரையில் வனத்துறையினரால் கட்டப்பட்டிருந்த பனைமரத்தால் ஆன சுற்றுலா படகு நிறுத்தும் தளமானது உடைந்து சேதமடைந்தது. மேலும் அதன் ஒரு பகுதியானது முழுமையாக கடலில் மூழ்கியது.

இந்த சம்பவம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News