செய்திகள்
கோப்புபடம்

மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

Published On 2020-07-23 11:26 GMT   |   Update On 2020-07-23 11:26 GMT
மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கலெக்டரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
சேலம்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் வர்க்கீஸ், இளையபெருமாள், மாவட்ட பொருளாளர் சந்திரதாசன், மாநில துணை தலைவர் சியாமளநாதன், மாநில இணை செயலாளர் திருமுருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய மளிகை பொருட்கள் சில்லறையில் வணிகம் செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க கோருதல் சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளித்துள்ளர்கள். மற்றும் அரசு உத்தரவின்படி ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாலை 4.30 மணி முதலே கடைகளை மூட வற்புறுத்துகிறார்கள். மேலும் அரசின் விதிமுறைகளான முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து இருந்தாலும் அவர்கள் ஏதாவது காரணத்தை காட்டி இஷ்டம்போல் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள். எனவே தாங்கள் தலையிட்டு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம்.

சில்லறையில் வணிகம் செய்யும் மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணிவரை நீட்டிக்க செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தில் சாலையோர உணவு பொருள் வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க உணவகங்கள், தேநீர் கடைகளை போல் இரவு 8 மணிவரை வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என அதில் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News