செய்திகள்
கறுப்பர் கூட்டம்

கறுப்பர் கூட்டத்தின் 500 வீடியோக்கள் இணையத்தில் இருந்து நீக்கம்

Published On 2020-07-21 06:07 GMT   |   Update On 2020-07-21 06:07 GMT
கறுப்பர் கூட்டத்தின் 500 வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்கி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை:

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இதையடுத்து நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில் இன்று கறுப்பர் கூட்டத்தின் 500 வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்கி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
Tags:    

Similar News