செய்திகள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

நத்தத்தில் முழு ஊரடங்கு- கடைகள் அடைப்பு

Published On 2020-07-12 09:28 GMT   |   Update On 2020-07-12 09:28 GMT
நத்தம் நகர், பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
நத்தம்:

நத்தம் பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து நத்தம் தாலுகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என்று வர்த்தகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நத்தம் நகர், பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில் காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பால் மற்றும் மருந்துகடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற 20-ந்தேதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News