செய்திகள்
காயம் அடைந்த சிறுவன்

நாட்டு வெடிகுண்டை பந்து என நினைத்து கடித்த சிறுவன்

Published On 2020-07-06 11:37 GMT   |   Update On 2020-07-06 11:37 GMT
திருவண்ணாமலை அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டிகளை பயன்படுத்தி வரும் நிலையில் 7 வயது சிறுவன் அதனை பந்து என நினைத்து கடித்ததால் காயமடைந்தான்.
செங்கம்:
 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே  மேல்கரியமங்கலம் வனப்பகுதி உள்ளது. அதனை ஒட்டியுள்ள அடர்ந்த விளைநிலத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து, வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் 7 வயது நிரம்பிய கமலக்கண்ணனின் மகன் தீபக் அப்பகுதியில் விளையாடியக் கொண்டிருந்தான்.  அப்போது அங்கு பந்து போல் காணப்பட்ட நாட்டு வெடிகுண்டு எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரதவிதமாக அதை எடுத்து வாயால் கடித்தான்,  அது வெடித்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

அந்த வெடி விபத்தில் தீபக்கின் தாடை மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனே படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், மேல் சிகிக்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் அது விலங்குகளை வேட்டையாக வைக்கப்பட்ட நாட்டு வெடி குண்டு என்பதும், அதை  வைத்த வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்தும் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையில் போலீசார்  தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

Similar News