செய்திகள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு -தமிழக அரசு

Published On 2020-07-03 08:12 GMT   |   Update On 2020-07-03 08:12 GMT
ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

பின்னர் இந்த காலக்கெடுவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முடிவை கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய அரசு எடுத்திருந்தது. 

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News