செய்திகள்
நள்ளிரவில் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

தென்காசி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு- காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-06-28 05:40 GMT   |   Update On 2020-06-28 05:40 GMT
தென்காசியில் போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் இறந்ததாக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி:

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநரான குமரேசனை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீஸ் தாக்குதலில் பலத்த காயமடைந்த குமரேசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து குமரேசன் உயிரிழந்த தகவலை அறிந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த ஓட்டுநர் குமரேசனின் தந்தையான நவனீத கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காவலர் மற்றும் எஸ்.ஐ. என இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News