செய்திகள்
ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்

ஊரடங்கை மீறிய 6 கடைகளுக்கு சீல்

Published On 2020-06-27 10:20 GMT   |   Update On 2020-06-27 10:20 GMT
திருவாரூரில் ஊரடங்கை மீறிய 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. முக கவசம் அணியாமல் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் 45 பேருக்கு ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர்:

கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வர்த்தக நிறுவனங்கள் செயல்்படுவதற்கான கால நேரம், ஊழியர்கள் முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது குறித்து பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா? என்பது குறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தலைமையில் நகராட்சி மேலாளர் முத்துகுமரன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் கடைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 6 கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காதது தெரியவந்தது. இதனையடுத்து 6 கடைகளையும் அதிகாரி பூட்டி சீல் வைத்தார். அதனை தொடர்ந்து முக கவசம் அணியாமல் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் 45 பேருக்கு ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் நுகர்வோர்கள் கைகழுவும் வகையில் தொற்று நீக்கல் மையம் அமைக்கப்படாததால் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News