செய்திகள்
முகக்கவசம்

தர்மபுரி நகரில் முகக்கவசம் அணியாமல் சென்ற 162 பேருக்கு அபராதம்

Published On 2020-06-24 14:35 GMT   |   Update On 2020-06-24 14:35 GMT
தர்மபுரி நகரில் சாலைகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற 162 பேருக்கு அதிகாரிகள் தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
தர்மபுரி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வீடுகளை விட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக உரிய கண்காணிப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகர பகுதியில் கொரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு தாசில்தார் ராஜசேகரன் தலைமையில் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் கொண்ட குழுவினர் கடைகள் மற்றும் முக்கிய வீதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 ரோடு சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் சாலைகளில் பொதுமக்கள் பலர் நடந்து செல்வதும், இருசக்கர வாகனங்களில் செல்வதும் தெரியவந்தது.

முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் 2 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்களில் அமர்ந்து சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் 162 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அபராதம் செலுத்தியவர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினார்கள்.
Tags:    

Similar News