செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-06-24 08:44 GMT   |   Update On 2020-06-24 08:44 GMT
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கூறியுள்ளதாவது:-

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சுறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு லட்சத்தீவு பகுதிகளுக்கும், நாளையில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளுக்கும், தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளது. 
Tags:    

Similar News