செய்திகள்
அபராதம்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம்

Published On 2020-06-24 08:36 GMT   |   Update On 2020-06-24 08:36 GMT
ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கல்லாவி:

ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தலைமையில் அலுவலர்கள் கச்சேரி தெரு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, முனியப்பன் கோவில் தெரு, பேரூராட்சி சாலை, வெங்கடதாம்பட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோல் பேரூராட்சிக்குட்பட்ட அவ்வை நகர், காமராஜர் நகர், அண்ணா நகர், செங்குந்தர் தெரு ஆகிய இடங்களில் கழிவுநீரை சாக்கடை கால்வாயில் நேரடியாக விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அக்ரஹார தெருவில் பொது குடிநீர் குழாயில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தவரின் மின் மோட்டார் மற்றும் குழாய்களை செயல் அலுவலர் ராஜா மற்றும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News