search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பொருட்கள்"

    • சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு டாப்சிலிப்பில் யானைகள் முகாம், குரங்கு நீர்வீழ்ச்சி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விடுதிக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் டாப்சிலிப், சேத்துமடை, அட்டக்கட்டி, சிறுகுன்றா ஆகிய பகுதிகளில் வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் 39 தங்கும் விடுதிகள் தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து அறைகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. மானாம்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முடிந்ததும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்
    • ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும்

    திருப்பூர்:

    காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மைக்காக நம்மை ஈடுப்படுத்திக்கொள்வோம் என்ற திட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தூய்மை பணியும் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ெரயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ் குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    உதவி வணிக மேலாளர் பேசுகையில், ெரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
    • பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கன்னியாகுமரியில் அதிகாரிகள் அதிரடி சோதனை
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகுதி யில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், பிரவீன்ரகு, ரவி ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    மொத்தம் 44 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட் டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 7 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் எதுவும் ஆய்வின்போது சிக்க வில்லை. இதுபோன்ற ஆய்வுகள் அவ்வப்போது "திடீர்"என்று மேற்கொள் ளப்படும் என்றும் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட புகார் ஏதேனும் பொது மக்கள் தெரிவிக்க விரும்பி னால் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம், அவர்களு டைய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
    • கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சுகாதார மேற்பார் வையாளா்கள் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அடங்கிய குழுவினா் செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, பம்ப் ஹவுஸ் ரோடு, கேசி ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வணிக நிறுவனங்க ளிலும் சோதனை நடத்தினர்.

    அதன்படி தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்திய, வைத்திருந்த, விற்பனை செய்த கடைகள், உணவகங்கள் உள்பட பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.

    • 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- 3 கடைகளுக்கு அபராதம்
    • 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் சுகாதார அதிகாரி முருகன் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஸ் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுதர்சிங், வரி வசூலிப்பாளர்கள் அமல் ராஜ், சரோஜா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்தி மண்டப பஜார், மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    இதில் சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் கப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் கூறும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் தடையை மீறி பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முகழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது.
    • சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்கா கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஜூலியன் என்பவர் புதுவை கடற்கரை சாலையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அவரது கையில் வைத்திருந்த பேனரில், பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக அவர்களிடம் 10 நிமிடம் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற செய்து வேலை வழங்கி உணவு அளியுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மற்றொரு புறத்தில் நாம் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 100 பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசக்கூடாது. சத்தான சைவ உணவுகளை சாப்பிடுங்கள் என பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    இதுதொடர்பாக கடற்கரைக்கு வந்திருந்த வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார். வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக நூதன பிரசாரத்தில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர்.
    • இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    அவிநாசி:

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த, விற்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    எச்சரிக்கை விடுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உத்தரவை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சில கடைகள் செயல்பட்டு வருவதாக சுகாதரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த, மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கப்புகள், துணி பைகள் என மூட்டை மூட்டையாக குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளோடு வருபவர்களுக்கு இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர். அதே போல் அக்கடையின் அருகே செயல்பட்டு வந்த மற்றொரு கடையில் இருந்த இதே போல் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள பறிமுதல் செய்யப்பட்டு மொத்த விற்பனை கடைக்கு அபராதமும், மற்றொரு கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

    • கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளா்கள் செல்வம், ஆறுமுகம், பி.செல்வம், சிவகுமாா், ராஜ்மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

    இதில் மத்திய பேருந்து நிலையம், பழனி பாதை, கல்பனா சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளா்கள், பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடைகளில் இருந்து 75 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கிடங்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்த கிடங்கில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனா்.

    • சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
    • கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி:

    அவிநாசி- கோவை சாலையில் உள்ள உலா் பழக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி உள்ளிட்ட குழுவினா் அந்தக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

    அப்போது கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளா், தட்டு, மேசை விரிப்புகள் உள்ளிட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, நீர்நிலைகளில் தேங்கி பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளாக அதிகளவு வெளியேற்றப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கவர்கள், பேப்பர் பிளேட், டம்ளர், கப், விரிப்பு உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    உடுமலை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது கோவையிலிருந்து பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு இறக்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது.அவற்றை கண்காணித்து சத்திரம் வீதி, பைபாஸ் ரோட்டிலுள்ள மளிகை கடைகளில் இருந்து 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வந்த வாகனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 7 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என 35 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×