செய்திகள்
மீன் விற்பனை

சென்னையில் இறைச்சி- மீன் கடைகள் இன்று முதல் இயங்காது

Published On 2020-06-19 02:17 GMT   |   Update On 2020-06-19 02:17 GMT
12 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் இன்று முதல் 30-ந்தேதி வரை இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகியவற்றுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் மூடப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதனால் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய நான்கு இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இன்று முதல் மூடப்ப.

இது தவிர சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழி, ஆடு, மாடு இறைச்சி கூடங்கள் மற்றும் மீன்கடைகள் ஆகியவை முழுமையாக மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News