செய்திகள்
பெட்ரோல் பங்க்

12-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.32

Published On 2020-06-18 03:32 GMT   |   Update On 2020-06-18 03:32 GMT
கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 78 காசுகளும், டீசல் 6 ரூபாய் 1 காசும் உயர்ந்துள்ளன.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் வரிகளுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. இந்நிலையில், 12வது நாளாக இன்றும்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 46 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 23 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 78 காசுகளும், டீசல் 6 ரூபாய் 1 காசும் உயர்ந்துள்ளன.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.81 ஆகவும், டீசல் ரூ.76.43 ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84.15, டீசல் விலை ரூ.74.32, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.79.08, டீசல் ரூ.71.38 என்ற அளவிலும் விற்பனை ஆகிறது.
Tags:    

Similar News