செய்திகள்
பெட்ரோல் பங்க்

9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Published On 2020-06-15 03:42 GMT   |   Update On 2020-06-15 03:42 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், 9வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கிது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. அவ்வகையில் இன்று 9வதுநாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 79 ரூபாய் 96 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 72 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News