செய்திகள்
கரும்புகள்

உடுமலை அமராவதி அணை பாசன பகுதியில் கரும்பு வெட்டும் பணி தீவிரம்

Published On 2020-06-08 13:53 GMT   |   Update On 2020-06-08 13:53 GMT
உடுமலை அமராவதி அணை பாசன பகுதியில் கரும்பு வெட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த உள்ள அமராவதி அணையின் மூலம் கொழுமம் , கொமரலிங்கம், சாமராயப்பட்டி, பெருமாள் புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கரும்பு அதிக அளவில் பயிரிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விவசாய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பகுதிகளில் கரும்பு வெட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 60 ஆயிரம் செலவு செய்திருக்கும் நிலையில் தற்போது 35 டன் மட்டும் எடுக்க முடிகிறது. ஒரு ஏக்கருக்கு 50 டன் கிடைக்க வேண்டிய நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் வெட்ட கூடிய தருணத்தில் கரும்புகளை வெட்டாத காரணத்தால் கரும்புகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கவில்லை. ஆகையால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News