செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது- பொதுத்தேர்வு முடிவு குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி

Published On 2020-06-08 07:09 GMT   |   Update On 2020-06-08 07:09 GMT
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? என அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

‘லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? கொரோனா வைரஸ் பரவுவதை கவனிக்கவில்லையா? ஊரடங்கு காலத்திலேயே பொதுத்தேர்வை நடத்த என்ன அவசியம் வந்தது? தேர்வை மேலும் ஒரு மாதம் தள்ளிவைக்காமல் ஏன் அவசரம் காட்டப்படுகிறது? பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா?

இது 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம். மாணவர்கள், ஆசிரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News