செய்திகள்
சிறுமி திருமணம் நிறுத்தம்

செய்யாறு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-06-06 07:20 GMT   |   Update On 2020-06-06 07:20 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனப்பத்தூர் கிராமத்தின் ஏரிக்கரையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் 18 வயது பூர்த்தி அடையாத  சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தின் சமூக நலத்துறை அலுவலர் ஷர்மிளா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு காஞ்சிபுரம் மாவட்டம் விசூர் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் தங்கமணி என்பவருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

மணக்கோலத்தில் திருமணத்திற்காக இருவரும் தயாராக இருப்பதை பார்த்த சமூக நலத்துறை அலுவலர் ஷர்மிளா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக நடக்க இருந்த சிறுமி திருமணத்தை தடுத்தி நிறுத்தி 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் நடத்த கூடாது எனவும், மீறினால் சட்டப்படி போலீசில் புகார் செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து இருவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தினர். 17 வயதுடைய பெண்ணை சமூக நலத்துறை அலுவலர் ஷர்மிளா திருவண்ணாமலை குழந்தை நல காப்பகத்திற்கு அழைத்து சென்றார்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News