செய்திகள்
பூ வியாபாரிகள் முற்றுகை

திண்டுக்கல் மாநகராட்சியில் பூ வியாபாரிகள் முற்றுகை

Published On 2020-06-01 11:26 GMT   |   Update On 2020-06-01 11:26 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் பூ வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டது.

அருகில் உள்ள விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பூ வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை வியாபாரிகளுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

போக்குவரத்து அதிகாரிகள் சமரசம் செய்து வியாபாரிகளை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பூ வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிரந்தரமாக வியாபாரம் பாதிக்காத அளவில் பூ விற்பனை செய்ய இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News