செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த நாமக்கல் மாவட்டம்

Published On 2020-05-30 02:47 GMT   |   Update On 2020-05-30 02:47 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இதனால் அம்மாவட்டம் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்துள்ளது.
நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவர் ஆந்திராவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிச்சென்று வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News