செய்திகள்
வெயில்

அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது

Published On 2020-05-28 06:38 GMT   |   Update On 2020-05-28 06:38 GMT
பொது மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், ஜூன் 2-வது வாரம் வரை வெப்பநிலை அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் ஆண்டுதோறும் மே 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நீடிக்கும். இந்த 25 நாட்களும் அக்னி வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும்.

இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

கடந்த 22-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அன்றைய தினம் திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.

அதன்பிறகு அடுத்தடுத்து வந்த நாட்களில் சென்னை மீனம்பாக்கம், கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவதாகி வருகிறது.

இந்த நிலையில் பொது மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனாலும், ஜூன் 2-வது வாரம் வரை வெப்பநிலை அதிகமாகவே காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News