செய்திகள்
தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் ஆசிரியர்களுக்கு பரிசோதனை

மதுரையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

Published On 2020-05-27 11:30 GMT   |   Update On 2020-05-27 11:30 GMT
மதுரை மாவட்டத்தில் 6 மையங்களில் சுமார் 1800 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி 24-ந் தேதியுடன் முடிவடைந்தது.

மதுரை மாவட்டத்தில் 316 பள்ளிகளை சேர்ந்த 36 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

ஏப்ரல் 7-ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. விடைத்தாள்கள் பள்ளிகளில் தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

சுமார் 1½ மாத தாமதத்திற்கு பிறகு இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.

மதுரை மாவட்டத்திலும் 6 மையங்களில் சுமார் 1800 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு செல்ல வசதியாக பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மையத்தில் ஆசிரியர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News