செய்திகள்
கொரோனா வைரஸ்

கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா

Published On 2020-05-26 07:28 GMT   |   Update On 2020-05-26 07:28 GMT
கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவர் கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 21-ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பரிசோதனை கூடத்தில் பேராசிரியர் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று தெரிய வந்தது. அதில் பேராசிரியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பிறகு பேராசிரியரை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது வீட்டுக்கே வந்து பேராசிரியருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News