செய்திகள்
கொரோனா வைரஸ்

சிறப்பு விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா

Published On 2020-05-26 06:13 GMT   |   Update On 2020-05-26 06:16 GMT
சிறப்பு விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஆலந்தூர்:

வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் முறையான ஆவணங்கள் இன்றி வேலைக்கு சென்று சிக்கியவர்கள், சிறை தண்டனை காலம் முடிந்தும் கொரோனா தொற்று ஊரடங்கால் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடியாமல் தவித்தனர். மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஐக்கிய எமிரேட்ஸ் அரசு, தங்கள் நாட்டு விமானங்களில் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தது.

அதன்படி துபாயில் இருந்து முதல் சிறப்பு விமானம் 18-ந்தேதி 5 பெண்கள் உள்பட 178 பேருடன் வந்தது. இதில் வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. கடந்த 24-ந்தேதி 2-வது சிறப்பு விமானம் 100 பேருடன் வந்தது. இவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆவடி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் இவர்களில் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
Tags:    

Similar News