செய்திகள்
நாய் கடித்து காயம் - கோப்புப்படம்

கொடைக்கானலில் வெளிநாட்டு நாய் கடித்து ஒருவர் காயம்

Published On 2020-05-20 09:45 GMT   |   Update On 2020-05-20 09:45 GMT
கொடைக்கானலில் அனுமதியின்றி வளர்த்த வெளிநாட்டு நாய் கடித்து ஒருவர் காயம் அடைந்தார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்தவர் சுற்றுலா பயணிகளுக்கு காட்டேஜ் வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் அமெரிக்காவில் வளர்க்கப்படும் பிக்புல் எனப்படும் ஒரு வகை நாயினை வளர்த்துவருகிறார். இவ்வகை நாயானது முதலாளியின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிய கூடிய சுபாவம் கொண்டது.

இவ்வகை நாய்களை இந்தியாவில் நடைபெறும் நாய்கள் கண்காட்சிக்கு அனுமதில்லை. இவ்வகை நாய்களுக்கு எந்த ஒரு சான்றிதழ் வழங்குவதும் கிடையாது. இந்த பிக்புல் நாய்கள் மிக கொடூரமாக கடிக்கும் குணம் கொண்டது இதனால் இந்தியாவில் இவ்வகை நாய்களை வளர்ப்பவர்கள் மிக மிக குறைவு.

இச்சூழலில் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அவரிடம் வளர்க்கப்படும் பிக்புல் நாயானது வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்கச்சென்றவரை கடித்து குதறியது. இவ்விபத்திற்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நாய்கடி ஊசி போட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நாய் கடி வாங்கிய வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News