செய்திகள்
கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம்- ராதாகிருஷ்ணன்

Published On 2020-05-15 06:40 GMT   |   Update On 2020-05-15 06:40 GMT
சென்னையில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள ராயபுரம் மண்டலத்துக்கு தனித்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதி வாரியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 971 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பை குறைக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதன் மூலம் 70 சதவீதம் நோய் தொற்று பரவுகிறது. மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு எதிர்ப்பார்க்கிறோம். முகக்கவசம் அணிந்தால் வைரஸ் பரவலை தடுக்க முடியும். கொரோனால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. சென்னையில் 65 வார்டுகளில் கொரோனா தொற்று பத்துக்கும் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News