செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரு வாரத்தில் 300 பேருக்கு தொற்று - திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியது

Published On 2020-05-14 09:24 GMT   |   Update On 2020-05-14 09:24 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவாரத்தில் 300 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி இருக்கிறது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்து இருக்கிறது.

கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு காரணமாக நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, குன்றத்தூர் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

கடந்த வாரம் மாவட் டத்தில் கொரோனா பாதிப்பு வெறும் 192 மட்டுமே இருந்தது. ஒருவாரத்தில் 300 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவள்ளூர் 2-வது இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் உள்ள சென்னையில் மொத்தம் 5,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

Tags:    

Similar News