செய்திகள்
ரேசன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து நெல்லைக்கு 2,700 டன் ரேஷன் அரிசி வந்தது

Published On 2020-05-12 14:25 GMT   |   Update On 2020-05-12 14:25 GMT
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நெல்லைக்கு 2,700 டன் ரேஷன் அரிசி வந்தது.
நெல்லை:

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ரேஷன் அரிசி தமிழகத்து வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக அரிசி வந்து கொண்டு இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நேற்று சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி வந்தது. மொத்தம் 42 பெட்டிகளில் 2,700 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து லாரி மூலம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Tags:    

Similar News