செய்திகள்
டிடிவி தினகரன்

மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும்- டிடிவி தினகரன்

Published On 2020-05-05 03:19 GMT   |   Update On 2020-05-05 03:19 GMT
மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழகஅரசு திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில் மே 7-ம் தேதி முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது,  கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத்  திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப்  பழனிசாமி அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News