செய்திகள்
முட்டைகள்

நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம்

Published On 2020-04-26 08:43 GMT   |   Update On 2020-04-26 08:43 GMT
தமிழகத்தில் 5 மாநகராட்சியில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததால் நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மாநகராட்சியில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததால் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் 15கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறும்போது, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று முட்டை ரூ.3:80 விலை நிர்ணயத்தது. ஆனால் ரூ.3 க்கு மட்டுமே முட்டை விற்பனை ஆகின.

இந்நிலையில் இன்று 80 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3 ஆக விலை நிர்ணயம் செய்ப்பட்டுள்ளன. ஆனால் ரூ.2.50-க்கு மட்டுமே முட்டை விற்பனையாகின்றன. தமிழகத்தில் அதிகளவில் விற்பனயாகும் சென்னை, கோவை உள்ளிட்ட 5 மநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவித்ததே முட்டை விலை குறைவிற்கு காரணம் என்றார்.

Tags:    

Similar News