செய்திகள்
ஜிகே வாசன்

அசாதாரண சூழலில் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபம் தேடுவதா?- ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2020-04-16 10:48 GMT   |   Update On 2020-04-16 10:48 GMT
ஒரு அசாதாரண சூழலில் எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதமர் அறிவுரை மட்டும் கூறவில்லை. நோயிற்கு தீர்வு காண வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய நிலையை வரும் 20 -ந்தேதியிலிருந்து ஏற்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பொருளாதார உயர்வுக்கு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புக்கு உண்டான துறைகளையும் செயல்படுத்த அறிவித்திருக்கிறது.

மத்திய மாநில அரசுகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஆதரவுக்குரல் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவு கொடுக்காமல் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடிய வகையில் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. காரணம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு புறம் ஆதரவு என்று பேச்சளவில் சொல்லிவிட்டு மறுபுறம் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருப்பது அரசுக்கு ஆதரவு அளிப்பதற்காக அல்ல அரசியல் ஆதாயம் தேடுவதற்காக.

ஒரு அசாதாரண சூழலில் எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். கொரோனாவை ஒழிப்பதிலும், மக்கள் சுமையைக் குறைப்பதிலும் அரசியல் கட்சியினர், பொது மக்கள் என நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News