செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் வலியுறுத்தல்

Published On 2020-04-11 11:57 GMT   |   Update On 2020-04-11 11:57 GMT
ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம் கூறியதாவது:

ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறைக்கு என தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்கக் கூடாது. 

ரெயில் மூலமாக பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News