செய்திகள்
கோப்புபடம்

தஞ்சையில் தடையை மீறி வலம் வந்த 80 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2020-04-09 08:26 GMT   |   Update On 2020-04-09 08:26 GMT
தஞ்சையில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வலம் வந்த 80 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் தஞ்சை மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக தான் உள்ளது. காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க செல்வதாக கூறி பலர் மோட்டார் சைக்கிளிலும், கார்களிலும் சர்வ சாதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனங்களில் அடிக்கடி வந்து கொண்டிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மேற்கு வீதி, மருத்துவ கல்லூரி சாலை, உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து கீழவாசல் பகுதிக்கு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க தஞ்சை நகரில் 20 இடங்களில் காய்கறி மார்க்கெட், மற்றும் 9 இடங்களில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. அந்ததந்த பகுதிகளில் காய்கறிகள் வாங்காமல் பிறகு பகுதிக்கு வந்ததால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 78 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News